100 மீட்டர் ஓட்டப்பந்தய போட்டிக்கு மதுரை மாணவர் தேர்வு
உலக அளவில் நேபாளத்தில் நடைபெறும் 100 மீட்டர் ஓட்டப் பந்தய போட்டியில் பங்கேற்க மதுரை மாணவர் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
திருப்பரங்குன்றம்,
உலக அளவில் நேபாளத்தில் நடைபெறும் 100 மீட்டர் ஓட்டப் பந்தய போட்டியில் பங்கேற்க மதுரை மாணவர் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
ஓட்டப்பந்தயம்
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பஞ்சாயத்து யூனியனுக்கு உட்பட்ட எஸ்.புளியங்குளத்தில் வசித்து வருபவர் மோகன்ராஜ். இவரது மகன் ஜெகதீஸ்வரன். இவர் காரியா பட்டியில் சேது என்ஜினீயரிங் கல்லூரியில் 3-ம்ஆண்டு பயோமெடிக்கல் என்ஜினீயரிங் படித்து வருகிறார். ஜெகதீஸ்வரன் கடந்த பிப்ரவரி மாதத்தில் கோவாவில் நடைபெற்ற 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளி பதக்கம் பெற்றார். கோ-கோ போட்டியில் தங்கம் பதக்கம் பெற்று சாதனைபடைத்தார்.
தேர்வு
இந்தநிலையில் வருகிற ஆகஸ்டு மாதத்தில் 1-ந்தேதி முதல் 7-ந்தேதி வரை நேபாளத்தில் உலக அளவில் பல்வேறு திறன் போட்டிகள் நடக்கிறது. அதில் 100 மீட்டர் ஓட்டப்பந்தய போட்டியில் பங்கேற்க ஜெகதீஸ்வரன் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். இதையடுத்து அவர் போட்டியில் பங்கேற்க தினமும் சிறப்புபயிற்சி எடுத்து வருகிறார்.