மாநில அளவிலான ஆக்கி இறுதி போட்டி


மாநில அளவிலான ஆக்கி இறுதி போட்டி
x
தினத்தந்தி 29 July 2022 9:31 PM GMT (Updated: 30 July 2022 4:48 AM GMT)

மாநில அளவிலான ஆக்கி இறுதி போட்டி மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் இன்று நடக்கிறது.

மதுரை


மாநில அளவிலான ஆக்கி இறுதி போட்டி மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் இன்று நடக்கிறது.

ஆக்கி போட்டி

மதுரை ரிசர்வ் லைன் ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்தும் மாநில அளவிலான ஆக்கி போட்டிகள் ரேஸ்கோர்ஸ் விளையாட்டு அரங்கில் உள்ள ஆக்கி மைதானத்தில் கடந்த 24-ந் தேதி தொடங்கியது.

இதில் தமிழகத்தில் உள்ள தலைசிறந்த அணிகளான இந்தியன் வங்கி, சென்னை அணி, ஜி.எஸ்.டி. மற்றும் சென்ட்ரல் எக்சைஸ் அணி, சென்னை அணி, போஸ்டல் ஆக்கி கிளப் சென்னை அணி, மதுரை ரிசர்வ் லையன் ஸ்போர்ட்ஸ் கிளப் அணி, ஊட்டி எம்.ஆர்.சி. வெலிங்டன் அணி, தென் மண்டல காவல்துறை மதுரை அணி, சென்னை சிட்டி போலீஸ் அணி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சென்னை அணி, திருநகர் ஆக்கி கிளப் மதுரை அணி, தென்னக ெரயில்வே சென்னை அணி, சோழா திருச்சி அணி, மதுரை வாடிப்பட்டிஆ க்கி அணி, சென்னை வருமானவரித்துறை, தமிழ்நாடு காவல்துறை சென்னை அணி உள்ளிட்ட 24 அணிகள் பங்கேற்றன.

நேற்று நடந்த அரை இறுதி போட்டியில் சென்னை இந்தியன் ஓவர்சீஸ் அணியும், சென்னை தமிழ்நாடு போலீஸ் அணியும் மோதின. இதில் 5-2 என்ற கோல் கணக்கில் சென்னை இந்தியன் ஓவர்சீஸ் அணி வெற்றிபெற்று இறுதி போட்டிக்கு தகுதிபெற்றது. பின்னர் 2-வது அரை இறுதி போட்டியில் சென்னை வருமானவரித்துறை அணியும், சென்னை இந்தியன் வங்கி அணியும் விளையாடின.

இறுதிபோட்டி

விறுவிறுப்பாக நடந்த இந்த போட்டியில் 7-6 என்ற கோல் கணக்கில் சென்னை வருமானவரித்துறை அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் இறுதி போட்டிக்கு அந்த அணி தகுதி பெற்றது.

இன்று (சனிக்கிழமை) மாலை 4 மணிக்கு இறுதி போட்டியும், 3, 4 இடத்திற்கான போட்டிகள் மதியம் 2 மணிக்கு நடக்கிறது. போட்டிக்கான ஏற்பாடுகளை ரிசர்வ் லைன் ஸ்போர்ட்ஸ் கிளப் நிர்வாகிகள் கண்ணன் உள்ளிட்ட பலர் செய்துள்ளனர்.


Related Tags :
Next Story