தேசிய தடகள போட்டியில் ராமநாதபுரம் மாணவிகள் சாதனை


தேசிய தடகள போட்டியில் ராமநாதபுரம் மாணவிகள் சாதனை
x

தேசிய தடகள போட்டியில் ராமநாதபுரம் மாணவிகள் பதக்கம் வென்று சாதனை படைத்தனர்.

ராமநாதபுரம்


தேசிய தடகள போட்டியில் ராமநாதபுரம் மாணவிகள் பதக்கம் வென்று சாதனை படைத்தனர்.

தடகள போட்டி

தென் இந்திய அளவிலான 33-வதுதேசிய தடகள போட்டி ஆந்திர மாநிலம் குண்டூரில் கடந்த மாதம் நடை பெற்றது. தென்னிந்திய அளவில் நடைபெற்ற இந்த போட்டியில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, பாண்டிச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர். இதில் பரமக்குடி அசுகரன் விளையாட்டு கழகத்தில் பயிற்சி பெறும் தடகள வீரர்கள் தமிழ்நாடு அணியின் சார்பாக கலந்து கொண்டு 4 தங்கம்,1 வெள்ளி பதக்கங்களை பெற்று சாதனை படைத்தனர்.

20 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான குண்டு எறிதல் போட்டியில் பரமக்குடி அரசு மகளிர் கலைக்கல்லூரி இளங்கலை ஆங்கிலம் முதலாம் ஆண்டு மாணவி சர்மிளா முதல் இடம் பிடித்து தங்கப்பதக்கம் பெற்றுள்ளார்.

18 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான வட்டு எறிதலில் பரமக்குடி அரசு மகளிர் கலைக்கல்லூரி இளங்கலை ஆங்கிலம் முதலாம் ஆண்டு மாணவி சுவாதி முதல் இடம் பிடித்து தங்கப்பதக்கம் பெற்றுள்ளார்.

புதிய சாதனை

16 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான குண்டு எறிதலில் டான்போஸ்கோ பள்ளி பிளஸ்-2 மாணவி மதுமிதா முதல் இடமும் மற்றும் புதிய சாதனை படைத்து உள்ளார். மற்றும் வட்டு எறிதலில் இரண்டாம் இடம் பிடித்தார். 14 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான குண்டு எறிதலில் டான் போஸ்கோ பள்ளி 9-ம் வகுப்பு மாணவர் அபினவ் முதல் இடம் பிடித்து தங்கப்பதக்கம் பெற்றுள்ளார்.

இதேபோல் கிருஷ்ணகிரியில் நடைபெற்ற 36-வது தமிழ்நாடு மாநில அளவிலான ஓபன் தடகள போட்டியில் 18 வயதிற்கு உட்பட்ட 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் மாணவர் ரோஹித் 2-வது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். 16 வயதுக்கு உட்பட்டோருக்கான 2000 மீட்டர் தடகளப் போட்டியில் அலங்கார மாதா மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் 11-ம் வகுப்பு மாணவி மைக்கில் பெல்சியா 2-வது இடம் பிடித்தார்.

பாராட்டு

ஆந்திரா மற்றும் கிருஷ்ணகிரியில் நடைபெற்ற தேசிய மற்றும் மாநில அளவிலான தடகள போட்டியில் கலந்துகொண்டு வெற்றிபெற்ற மாணவ -மாணவிகள் நேற்று வெற்றி பெற்றதற்கான பதக்கம் மற்றும் சான்றிதழுடன் மாவட்ட கலெக்டரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். கலெக்டர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். அப்போது ராமநாதபுரம் மாவட்ட தடகள சங்கத்தின் செயலாளர் இன்பாரகு, அசுகரன் விளையாட்டு குழும பயிற்சியாளர் அருண் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


Next Story