நாமக்கல்லில் மாவட்ட அளவிலான தடகள விளையாட்டு போட்டிகள் நாளை தொடங்குகிறது
நாமக்கல்லில் மாவட்ட அளவிலான தடகள விளையாட்டு போட்டிகள் நாளை தொடங்குகிறது
நாமக்கல் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் ஜூனியர்கள் பிரிவில் ஆண்களுக்கான மாவட்ட அளவிலான தடகள விளையாட்டு போட்டிகள் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்க உள்ளது. மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் முன்னிலை வகிக்கிறார். மாவட்ட அத்லெட்டிக் அசோசியேசன் தலைவர் ஏ.கே.பி.சின்ராஜ் எம்.பி. தலைமை தாங்குகிறார்.
தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் போட்டிகளை தொடங்கி வைக்க உள்ளார். ராஜேஷ்குமார் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ராமலிங்கம், பொன்னுசாமி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கின்றனர்.
நாளை மறுநாள் (சனிக்கிழமை) ஜூனியர்கள் பிரிவில் மகளிருக்கான தடகள போட்டிகள் நடக்க உள்ளது. திருச்செங்கோடு ஈ.ஆர்.ஈஸ்வரன் எம்.எல்.ஏ., மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, விளையாட்டு துறை ஆய்வாளர் (பொறுப்பு) கோபாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகிக்க உள்ளனர். வெற்றி பெற்றவர்களுக்கு முன்னாள் அமைச்சர் தங்கமணி, சேகர் எம்.எல்.ஏ. ஆகியோர் பரிசு வழங்க உள்ளனர்.