விளையாட்டு போட்டிகள்


விளையாட்டு போட்டிகள்
x
தினத்தந்தி 14 Nov 2022 12:30 AM IST (Updated: 14 Nov 2022 12:30 AM IST)
t-max-icont-min-icon

விளையாட்டு போட்டிகள் நடந்தன.

நாகப்பட்டினம்

நாகை ஒன்றியம் வடுகச்சேரி மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொது சுகாதார துறையின் நூற்றாண்டு நிறைவு விழாவை கொண்டாடும் வகையில், ஊழியர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடந்தன. இதை வட்டார மருத்துவ அலுவலர் பிரியதர்ஷினி தொடங்கி வைத்தார். வட்டார சுகாதார மேற்பார்வையாளர்கள் நாகை செல்வன், செந்தில்குமார், டாக்டர்கள் கிருஷ்ணகுமார், ஆதவன், சுகாதார ஆய்வாளர் சுத்தானந்த கணேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆண்களுக்கான கபடி, 400 மீட்டர் ஓட்டப்பந்தயம், சதுரங்கம், குண்டு எறிதல், பெண்களுக்கான கபடி, 100 மீட்டர் ஓட்டப்பந்தயம், கோலப்போட்டி, இசை நாற்காலி உள்ளிட்ட போட்டிகள் நடந்தன. பின்னர் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் மாவட்ட நல கல்வியாளர் மணவாளன், துணை இயக்குனரின் நேர்முக உதவியாளர் அன்பரசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story