விளையாட்டு போட்டி


விளையாட்டு போட்டி
x

பி.எஸ்.ஆர். கல்லூரியில் விளையாட்டு போட்டி நடைபெற்றது.

விருதுநகர்

சிவகாசி,

வெம்பக்கோட்டை மண்டலத்தில் உள்ள பள்ளிகளில் படிக்கும் 14 முதல் 19 வயதுக்கு உட்பட்ட மாணவ, மாணவிகளுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகள் சிவகாசி பி.எஸ்.ஆர். கல்லூரியில் நடைபெற்றது. இதில் கைப்பந்து, கால்பந்து, பூப்பந்து ஆகிய போட்டிகளில் 400-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். மாணவர்கள் பிரிவு கைப்பந்து போட்டியில் ஏழாயிரம் பண்ணை நாடார் மகிமை மேல்நிலைப்பள்ளியும், செவல்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியும், கால்பந்து போட்டியில் கல்லம நாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியும், புனித அந்தோணி உயர்நிலைப்பள்ளியும், கீழாண்மறைநாடு அரசு மேல் நிலைப்பள்ளியும், செவல்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியும், பூப்பந்து போட்டியில் சிப்பிப்பாறை அரசு மேல்நிலைப்பள்ளியும், தாயில்பட்டி சி.இ.ஓ.ஏ. பள்ளியும் வெற்றி பெற்றது. மாணவிகள் பிரிவில் பூப்பந்து போட்டியில் தாயில்பட்டி சி.இ.ஓ.ஏ. பள்ளியும், கைப்பந்து போட்டியில் மம்சாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியும் வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கல்லூரியின் இயக்குனர் விக்னேஷ்வரி அருண்குமார், முதல்வர் செந்தில்குமார், டீன் மாரிச்சாமி ஆகியோர் பாராட்டினர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரியின் உடற்கல்வித்துறை பேராசிரியர் சுந்தரமூர்த்தி, விஜயராகவன் ஆகியோர் செய்திருந்தனர்.


Related Tags :
Next Story