போலீஸ், பொதுமக்கள் நல்லுறவு விளையாட்டு போட்டி


போலீஸ், பொதுமக்கள் நல்லுறவு விளையாட்டு போட்டி
x

போலீஸ், பொதுமக்கள் நல்லுறவு விளையாட்டு போட்டி நடந்தது.

திருநெல்வேலி

நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் உத்தரவின் பேரில், பொதுமக்கள்-போலீஸ் நல்லுறவை மேம்படுத்தும் வகையில் மாவட்டம் முழுவதும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி நெல்லை அருகே மானூர் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த பொதுமக்களிடம் நல்லுறவு ஏற்படுத்தும் வகையில் கைப்பந்து போட்டி நடத்தப்பட்டது.

இந்த போட்டியை மானூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சபாபதி தொடங்கி வைத்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். இதில் சப்-இன்ஸ்பெக்டர்கள் பழனி, கணேஷ்குமார், விஜயகுமார் மற்றும் போலீசார் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story