ஆதிபராசக்தி கல்லூரியில் விளையாட்டு போட்டி
கலவை ஆதிபராசக்தி கல்லூரியில் விளையாட்டு போட்டி நடந்தது.
கலவை
கலவை ஆதிபராசக்தி வேளாண்மை கல்லூரி தோட்டக்கல்லூரி வேளாண்மை கல்லூரி மற்றும் பொறியியல் மாணவ, மாணவிகளுக்கடையே கடந்த ஒரு மாதமாக கைப்பந்து, கால்பந்து, கூடைபந்து, கிரிக்கெட் ஓட்டப் பந்தயம் போன்ற பல்வேறு போட்டிகள் நடந்தன.
இதன் பரிசளிப்பு விழா ஆதிபராசக்தி கல்லூரி வளாகத்தில் வேளாண்மை கல்லூரி முதல்வர் வெங்கட்ராம் தலைமையில் நடைபெற்றது.
வேளாண்மை கல்லூரி கல்வி ஒருங்கிணைப்பாளர் அருண்குமரன், தோட்டக்கலை கல்லூரி கல்வி ஒருங்கிணைப்பாளர் சசிரேகா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கால்நடை மருத்துவர் பிரகதீஸ்வரர் வரவேற்றார்.
சிறப்பு விருந்தினராக கலெக்டர் பாஸ்கர் பாண்டியன் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கும், மாணவ மாணவிகளுக்கும் பரிசுகளை வழங்கினார்.
அப்போது அவர் பேசுகையில், ''மாணவர்களாகிய உங்களால் முடியாது எதுவும் இல்லை வருங்காலத்தில் உயர் அதிகாரிகளாகவும் விஞ்ஞானிகளாகவும் ராணுவ வீரர்களாகவும் நல்ல நிலைக்கு நீங்கள் வரவேண்டும் என வாழ்த்துகிறேன்'' என்றார்.
இதில் பொறியியல் கல்லூரி முதல்வர் பாலகண்ணன், உடற்பயிற்சி ஆசிரியர் கேசவன், கல்லூரி அலுவலர் பிரபாகரன் உள்பட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்