புதிதாக உருவாக்கப்பட்ட மைதானத்தில் விளையாட்டு போட்டி


புதிதாக உருவாக்கப்பட்ட மைதானத்தில் விளையாட்டு போட்டி
x

ஏலகிரி மலையில் புதிதாக உருவாக்கப்பட்ட மைதானத்தில் விளையாட்டு போட்டி நடைபெற்றது.

திருப்பத்தூர்

ஜோலார்பேட்டையை அடுத்த ஏலகிரிமலை ஊராட்சியில் உள்ள மஞ்சங்கொல்லை புதூர் கிராமத்தில் இளைஞர்கள் விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். அதன் அடிப்படையில் ஊராட்சி மன்ற நிர்வாகம் சார்பில் ஊராட்சி மன்ற தலைவர் ராஜஸ்ரீ கிரிவேலன் நடவடிக்கை மேற்கொண்டு அரசுக்கு சொந்தமான இடத்தில் பாறைகளாக இருந்த இடத்தை பொக்லைன் எந்திரம் மூலம் சமம் செய்து விளையாட்டு மைதானத்தை உருவாக்கினார்.

இந்தநிலையில் நேற்று முதல் விளையாட்டு மைதானம் பயன்பாட்டுக்கு வந்தது. நேற்று கைப்ந்து போட்டி நடைபெற்றது. விளையாட்டு போட்டியை ஊராட்சி மன்ற தலைவர் ராஜஸ்ரீ கிரிவேலன், துணைத் தலைவர் அ.திருமால், ஏலகிரி மலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். விளையாட்டு மைதானம் பயன்பாட்டிற்கு வந்துள்ளதால் அப்பகுதி இளைஞர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story