மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு விளையாட்டு போட்டி


மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு விளையாட்டு போட்டி
x
தினத்தந்தி 28 Nov 2022 12:15 AM IST (Updated: 28 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

பாவூர்சத்திரத்தில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு விளையாட்டு போட்டி நடந்தது.

தென்காசி

பாவூர்சத்திரம்:

உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி, ஆய்க்குடி அமர்சேவா சங்கம் ஏற்பாட்டில், வெற்றிக்கரங்கள் மாற்றுத்திறனாளிகள் சுய உதவிக்குழு கூட்டமைப்பு சார்பில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டிகள் பாவூர்சத்திரம் த.பி.சொ. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற்றது.

அமர்சேவா சங்க ஒருங்கிணைப்பாளர் இசக்கிமுத்து தலைமை தாங்கினார். கீழப்பாவூர் பேரூராட்சி தலைவர் பி.எம்.எஸ்.ராஜன், பஞ்சாயத்து தலைவர் சொள்ளமுத்துமருதையா ஆகியோர் போட்டிகளை தொடங்கி வைத்தனர். பஞ்சாயத்து துணைத்தலைவர் தங்கசேது, பேரூராட்சி கவுன்சிலர் இசக்கி முத்து மற்றும் அமர்சேவா சங்க பணியாளர்கள், வெற்றிக்கரங்கள் கூட்டமைப்பு பொறுப்பாளர்கள், சுய உதவிக்குழு பொறுப்பாளர்கள், மாற்றுத்திறன் குழந்தைகள் கலந்து கொண்டனர்.




Next Story