மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு விளையாட்டு போட்டி
அவலூர்பேட்டையில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு விளையாட்டு போட்டி நடந்தது.
விழுப்புரம்
அவலூர்பேட்டை:
அவலூர்பேட்டையில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாற்றுத்திறனாளி மாணவ-மாணவிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இதற்கு வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஜமுனா தலைமை தாங்கி போட்டியை தொடங்கி வைத்தார். இதில் ஒட்டப்பந்தயம், ஊசியில் நூல் கோர்த்தல், முறுக்கு கடித்தல், பலூன் உடைத்தல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றிபெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முன்னதாக ஆசிரியர் பயிற்றுநர் ஜெயமாலா வரவேற்றார். இதில் தலைமை ஆசிரியர்கள் சின்ராஜ், பொன்னுசாமி, மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள், சிறப்பு ஆசிரியர்கள், இயன்முறை மருத்துவர்கள், பகல் நேர காப்பாளர்கள், பெற்றோர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் சிறப்பாசிரியர் குழந்தைராஜ் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story