டாக்டர்களுக்கான விளையாட்டு போட்டி


டாக்டர்களுக்கான விளையாட்டு போட்டி
x

டாக்டர்களுக்கான விளையாட்டு போட்டி நடந்தது.

திருச்சி

திருச்சி:

இந்திய மருத்துவ மன்றம் சார்பில் டாக்டர்களுக்கான விளையாட்டு போட்டி திருச்சி கல்லுக்குழி ரெயில்வே விளையாட்டு மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் டாக்டர்களும் அனைத்து வகையான விளையாட்டுக்களிலும் பங்கேற்க வேண்டும் என்ற நோக்கத்துடன் ஓட்டப்பந்தயம், நடைபோட்டி, இறகுபந்து, த்ரோபால், குண்டு எறிதல், கிரிக்கெட், மெதுவாக சைக்கிள் ஓட்டுதல், நீளம் தாண்டுதல் உள்ளிட்ட 15 வகையான போட்டிகள் நடத்தப்பட்டன. 100-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் கலந்து கொண்டு விளையாடினர். வெற்றி பெற்றவர்களுக்கு இந்திய மருத்துவ மன்ற மாவட்ட செயலாளர் தமிழ்செல்வி, மாவட்ட தலைவர் மோகன் ஆகியோர் பரிசுகளை வழங்கினார்கள்.


Next Story