சுகாதார பணியாளர்களுக்கு விளையாட்டு போட்டி


சுகாதார பணியாளர்களுக்கு விளையாட்டு போட்டி
x

நெல்லையில் சுகாதார பணியாளர்களுக்கான விளையாட்டு போட்டியை கலெக்டர் விஷ்ணு தொடங்கி வைத்தார்.

திருநெல்வேலி

பொது சுகாதாரத்துறையின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நெல்லை பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு அரங்கில் சுகாதார பணியாளர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. இந்த போட்டியை மாவட்ட கலெக்டர் விஷ்ணு தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், 'தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை தோன்றி 100 ஆண்டுகள் நிறைவு பெற்றதை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. நெல்லை மாவட்ட அளவில் பொது சுகாதாரம் மற்றும் அதன் சார்பு துறைகளில் பணியாற்றும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் 1,000 பேர் பங்கேற்கும் விளையாட்டு போட்டி தொடங்கப்பட்டது. கைப்பந்து, கபடி, ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட 15-ம் மேற்பட்ட போட்டிகள் நடைபெறுகின்றன. வருகிற 10-ந்தேதி கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும் நூற்றாண்டு விழாவில் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுவதுடன் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது' என்றார்.

இந்த நிகழ்ச்சியில் சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் ராஜேந்திரன், மாவட்ட விளையாட்டு நல அலுவலர் கிருஷ்ண சக்கரவர்த்தி மற்றும் அரசு அலுவலர்கள், சுகாதார பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story