பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு போட்டி
பாகாயத்தில் பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு போட்டி நடந்தது.
வேலூர்
அடுக்கம்பாறை
வேலூரை அடுத்த பாகாயத்தில் உள்ள தனியார் விளையாட்டு மைதானத்தில், பள்ளி மாணவர்களுக்கு வட்ட அளவிலான விளையாட்டு போட்டி நடந்துவருகிறது.
சிறப்பு அழைப்பாளராக பென்னாத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் மற்றும் பேரூராட்சி முன்னாள் தலைவருமான அருள்நாதன் கலந்து கொண்டு, ஒலிம்பிக் ஜோதியை ஏற்றி போட்டியை தொடங்கி வைத்தார்.
இதில் தடகளம், குண்டு எறிதல், வட்டு எறிதல், ஈட்டி எறிதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் 45 பள்ளிகளை சேர்ந்த 700 மாணவர்கள் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.
நிகழ்ச்சியில் பேரூராட்சி முன்னாள் துணை தலைவர் ராஜா, பள்ளி மேலாண்மை குழு தலைவர் சண்முகப்பிரியா, பள்ளி தலைமை ஆசிரியர் உமாதேவன், உதவி தலைமை ஆசிரியை லீமாஜாக்லின், உடற்கல்வி ஆசிரியர்கள் ஜெயபிரபா, உமாபதி, கவிதா உள்ளிட்டார் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story