விளையாட்டு போட்டிகள்
கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.
சிவகங்கை
காரைக்குடி,
காரைக்குடி அருகே உள்ள கோவிலூர் கிராமத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி ஆண்டுதோறும் பல்வேறு விளையாட்டு போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. நேற்று கிருஷ்ண ஜெயந்தி விழா கிராம மக்கள் சார்பில் கொண்டாடப்பட்டது. முன்னதாக காலையில் பெண்களுக்கான கோலப்போட்டி நடைபெற்றது. தொடர்ந்து சிறுவர்-சிறுமியர்களுக்கான பாட்டிலில் நீர் நிரப்புதல், சாக்கு ஓட்ட போட்டி, ஓட்ட போட்டி, பானை உடைத்தல், இளைஞர்களுக்கான இளவட்டக்கல் தூக்குதல், பெண்களுக்கான கயிறு இழுத்தல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. மாலையில் சிறுவர்களுக்கான கலை நிகழ்ச்சியும், மாறுவேட போட்டியும் நடைபெற்றது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story