விளையாட்டு போட்டிகள்
பாளையங்கோட்டையில் விளையாட்டு போட்டிகள் நடந்தது.
தமிழக கத்தோலிக்க இளைஞர் இயக்கம் சார்பில் பாளையங்கோட்டை கத்தோலிக்க மறைமாவட்ட பொன் விழாவையொட்டி வி.எம்.சத்திரம் புனித அந்தோணியார் சி.பி.எஸ்.இ. பள்ளியில் கலை மற்றும் விளையாட்டு போட்டிகள் நேற்று நடைபெற்றது. பாளையங்கோட்டை மறைமாவட்ட பிஷப் அந்தோணிசாமி தலைமை தாங்கி போட்டிகளை தொடங்கி வைத்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிபின் ராஜ்மோன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
மறைமாவட்ட முதல் நிலை அருட்பணியாளர் குழந்தைராஜ், செயலக முதல்வர் ஞானபிரகாசம், பொருளாளர் எஸ்.ஏ.அந்தோணிசாமி, பள்ளி தாளாளர் எம்.எஸ்.அந்தோணிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் மறைமாவட்டத்துக்கு உட்பட்ட ஆலய பங்குகளை சேர்ந்த இளைஞர்கள், இளம்பெண்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு ஓட்டம், குண்டு எறிதல் உள்ளிட்ட தடகள போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் இளைஞர் இயக்க செயலர் இமானுவேல், சவேரியார் பேராலய உதவி பங்கு தந்தை செல்வின் மற்றும் சேவியர், சுதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.