தூத்துக்குடியில் போலீசாருக்கான விளையாட்டு போட்டிகள்


தூத்துக்குடியில் போலீசாருக்கான விளையாட்டு போட்டிகள்
x

தூத்துக்குடியில் போலீசாருக்கான விளையாட்டு போட்டிகளை போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் ஆய்வு செய்தார்

தூத்துக்குடி

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்ட போலீசாருக்கு உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு நிகழ்ச்சிகளை போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

போலீசாருக்கான விளையாட்டு

தூத்துக்குடி மாவட்ட போலீசாருக்கு ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமையன்று கவாத்து பயிற்சி, உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து உட்கோட்டங்கள் மற்றும் ஆயுதப்படையிலும் கவாத்து மற்றும் உடற்பயிற்சி நடந்தது.

அதில் தூத்துக்குடி நகர காவல் துறையினருக்கான உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகள் காமராஜ் கல்லூரிமைதானத்திலும், ஆயுதப்படை காவல்துறையினருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுலவக மைதானத்திலும் நடந்தது.

போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு

தூத்துக்குடி காமராஜ் கல்லூரி மைதானத்தில் நேற்று நடந்த காவல்துறையினரின் விளையாட்டு நிகழ்ச்சிகளில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் கலந்து கொண்டார். அதன் பின்னர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஆயுதப்படை காவலர்களின் உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு நிகழ்ச்சிகளை நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு செய்தார். பின்னர் போலீசாருக்கு பல்வேறு ஆலோசனைகளையும் அவர் வழங்கினார்.

கலந்து கொண்டவர்கள்

இந்த ஆய்வின்போது போது தூத்துக்குடி சைபர் குற்ற பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன், தூத்துக்குடி ஊரக உதவி போலீஸ் சூப்பிரண்டு சந்தீஸ், இன்ஸ்பெக்டர்கள் ஆனந்தராஜன், ஜெயசீலன், மணிமாறன், தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் வனிதா, ஆயுதப்படைபோலீஸ் இன்ஸ்பெக்டர் சுடலைமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story