பொது சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு விளையாட்டு போட்டிகள்
பொது சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு விளையாட்டு போட்டிகள்
பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை தொடங்கப்பட்டு 100 ஆண்டுகள் எட்டியுள்ளதை முன்னிட்டு, அதனை கொண்டாடும் வகையில் அந்த துறையில் பணியாற்றுபவர்களுக்கு கலை மற்றும் விளையாட்டு போட்டிகள் நடந்து வருகிறது. இதையொட்டி தலைஞாயிறு வட்டாரத்தில் கொண்டாப்பட்ட விழாவிற்கு வட்டார மருத்துவ அலுவலர் தேவிஸ்ரீ தலைமை தாங்கினார். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் செல்வன் போட்டிகளை தொடங்கி வைத்தார். சுகாதார ஆய்வாளர்கள் இளையராஜா, நாகராஜ், பட்டாபிராமன், அருளானந்தம், கண்மருத்துவ உதவியாளர் முரளி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பணியாளர்களுக்கு ஓட்டபந்தயம், கயிறு இழுத்தல், பாட்டுப்போட்டி, பேச்சு போட்டி கவிதை போட்டி, இசை நாற்காலி, கோலப்போட்டி ஆகியவைகள் நடந்தது. வெற்றி பெற்றவர்களுக்கு டாக்டர் சுபசங்கேஸ்வரி வாழ்த்துகளை தெரிவித்தார். முடிவில் சமுதாய சுகாதார செவிலியர் முத்துலெட்சுமி நன்றி கூறினார்.