வருவாய்த்துறை அலுவலர்களுக்கான விளையாட்டு போட்டிகள்


வருவாய்த்துறை அலுவலர்களுக்கான விளையாட்டு போட்டிகள்
x

ஆரணியில் வருவாய்த்துறை அலுவலர்களுக்கான விளையாட்டு போட்டிகளை உதவி கலெக்டர் தனலட்சுமி தொடங்கி வைத்தார்.

திருவண்ணாமலை

ஆரணி

ஆரணியில் வருவாய்த்துறை அலுவலர்களுக்கான விளையாட்டு போட்டிகளை உதவி கலெக்டர் தனலட்சுமி தொடங்கி வைத்தார்.

விளையாட்டு போட்டிகள்

தாசில்தார்கள், மண்டல துணை தாசில்தார்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்ட வருவாய் துறையினர் பணி சுமையின் காரணமாக சோர்வடையும் நிலை ஏற்படுகிறது.

அவர்களுக்கு சுறுசுறுப்பு ஏற்படுத்தும் வகையில் ஆரணி வருவாய் கோட்டத்துக்குட்பட்ட அனைத்து வருவாய் அலுவலர்களுக்கு பல்வேறு விதமான விளையாட்டு போட்டிகள் நடத்த கலெக்டர் பா.முருகேஷ் உத்தரவிட்டார்.

அதன் அடிப்படையில் ஆரணியை அடுத்த இரும்பேடு ஏ.சி.எஸ். நகரில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். சொக்கலிங்கம் கலைக்கல்லூரி வளாகத்தில் விளையாட்டு போட்டிகள் நடந்தது.

உதவி கலெக்டர் தொடங்கி வைத்தார்

வருவாய்த்துறை அலுவலர்களுக்கிடையே விளையாட்டு போட்டிகளை ஆரணி உதவி கலெக்டர் எம்.தனலட்சுமி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளர் குமாரசாமி வரவேற்றார்.

போட்டியில் வயதுக்கேற்ப கேரம் போட்டியும், செஸ் போட்டியும் நடைபெற்றது. ஏ.சி.எஸ். கல்வி குழும உடற்கல்வி இயக்குனர்கள் நடுவராக இருந்து வெற்றி பெற்றவர்களை தேர்வு செய்தனர்.

இதனைத்தொடர்ந்து வருகிற 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் கிரிக்கெட், கைப்பந்து உள்ளிட்ட போட்டிகளும் நடைபெற உள்ளது.

தொடர்ந்து மே 7-ந் தேதி நடைபெறும் போட்டியின் முடிவில் மாவட்ட கலெக்டர் பா.முருகேஷ் கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்குகிறார்.

நிகழ்ச்சியில் ஆரணி, போளூர், கலசபாக்கம், ஜமுனாமரத்தூர் ஆகிய தாலுகாவை உள்ளடக்கிய தாசில்தார்கள் ரா.மஞ்சுளா, ராஜராஜேஸ்வரி, சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார்கள் செந்தில், பாலாஜி, வட்ட வழங்கல் அலுவலர்கள் வெங்கடேசன், அருள், ஜெகதீசன், மண்டல துணை தாசில்தார்கள் தரணி குமரன், பிரியா, மற்றும் வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story