முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள்


முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள்
x

திருவண்ணாமலையில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளை கலெக்டர் முருகேஷ் தொடங்கி வைத்தார்.

திருவண்ணாமலை


திருவண்ணாமலையில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளை கலெக்டர் முருகேஷ் தொடங்கி வைத்தார்.

விளையாட்டு போட்டிகள்

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் மாவட்ட அளவிலான முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் இன்று தொடங்கியது.

இந்த போட்டிகள் தடகளம், செஸ், கைப்பந்து, இறகுப்பந்து போட்டி, கபடி, கிரிக்கெட் உள்ளிட்ட பிரிவுகளாக நடத்தப்படுகிறது.

இந்த போட்டிகளில் பங்கு பெற இணையதளத்தில் பதிவு செய்த நபர்கள் மட்டும் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க முடியும்.

தனி நபர்கள் பிரிவில் 11 ஆயிரத்து 560 பேரும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் 18 ஆயிரத்து 563 என மொத்தம் 30 ஆயிரத்து 123 பேர் பதிவு செய்து உள்ளனர்.

முதல் நாளான இன்று அரசு ஊழியர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இதில் 1000-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

கலெக்டர் தொடங்கி வைத்தார்

விளையாட்டு போட்டியை மாவட்ட கலெக்டர் முருகேஷ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

மேலும் இறகுப்பந்து போட்டியை அவர் விளையாடி தொடங்கி வைத்தார்.

முன்னதாக பள்ளி மாணவர்களின் சிலம்பாட்டம் உள்ளிட்ட தற்காப்பு கலைகள் குறித்த கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

வருகிற 28-ந் தேதி வரை தனித்தனியாக மாற்றுத் திறனாளிகள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுப் பிரிவினருக்கு வெவ்வேறு குறிப்பிட்ட நாட்களில் போட்டிகள் நடைபெற உள்ளது.

நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், மாவட்ட விளையாட்டு அலுவலர் பாலமுருகன், முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி, சமூக நல அலுவலர் மீனாம்பிகை, மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் தங்கமணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story