மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள்
மாவட்ட அளவிலான முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகளை கலெக்டர் முருகேஷ் தொடங்கி வைத்தார்.
மாவட்ட அளவிலான முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகளை கலெக்டர் முருகேஷ் தொடங்கி வைத்தார்.
விளையாட்டு போட்டிகள்
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் மாவட்ட அளவிலான முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் கடந்த 11-ந் தேதி தொடங்கியது.
இதில் தடகளம், செஸ், கைப்பந்து, பேட்மிட்டன், கபடி, கிரிக்கெட் உள்ளிட்ட பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்படுகிறது.
தனி நபர்கள் பிரிவில் 11 ஆயிரத்து 560 பேரும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் 18 ஆயிரத்து 563 பேரும் என மொத்தம் 30 ஆயிரத்து 123 பேர் இணையதளத்தின் மூலம் பதிவு செய்து உள்ளனர்.
இந்த போட்டிகளில் இணையதளத்தில் பதிவு செய்த நபர்கள் மட்டுமே விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
கடந்த 11-ந் தேதி அரசு ஊழியர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.
மாற்றுத்திறனாளிகளுக்கு
தொடர்ந்து இன்று மாவட்ட விளையாட்டு அரங்கில் மாற்றுத் திறனாளிகளுக்கான போட்டிகள் நடைபெற்றது. மாற்றுத் திறனாளிகளுக்கான போட்டிகளை மாவட்ட கலெக்டர் முருகேஷ் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் பல்வேறு போட்டிகளில் பங்கேற்றனர்.
மாற்றுத் திறனாளிகளுக்கு ஓட்டப்பந்தயம், இறகுபந்து, வாலிபால், எறிப்பந்து உள்ளிட்ட போட்டிகள் நடந்தது.
நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு அலுவலர் பாலமுருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
=========