முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள்
2022-23-ம் ஆண்டுக்கான மாவட்ட, மண்டல, மாநில அளவிலான முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிள் நடைபெற உள்ளது.
இதுகுறித்து கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
விளையாட்டு போட்டிகள்
முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாவட்ட, மண்டலம் மற்றும் மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளன.
பொதுப்பிரிவில் 15 வயது முதல் 35 வயது வரை உள்ளவர்களுக்கு மாவட்ட அளவில் கபடி, சிலம்பம், தடகளம், இறகுப்பந்து, கையுந்துப்பந்து போட்டிகளும், பள்ளி மாணவ- மாணவிகளுக்கு மண்டல அளவில் 12 வயது முதல் 19 வயது வரை கபடி, சிலம்பம், தடகளம், கூடைப்பந்து, இறகுப்பந்து, கால்பந்து, வளைகோல் பந்து, நீச்சல், மேசைப் பந்து, கையுந்துப்பந்து, டென்னிஸ், பளு தூக்குதல், கடற்கரை கையுந்து பந்து. போட்டிகளும் நடத்தப்படுகிறது.
கல்லூரி மாணவ- மாணவிகளுக்கு 19 வயது வரை மாவட்ட அளவில் கபடி, சிலம்பம், தடகளம், கூடைபந்து, இறகு பந்து, கால்பந்து, வளைகோல் பந்து, நீச்சல், மேசைப் பந்து, கையுந்துப்பந்து போட்டிகளும், மண்டல அளவில் டென்னிஸ், பளு தூக்குதல், கடற்கரை கையுந்து பந்து போட்டிகளும் நடத்தப்படுகிறது.
மாற்றுத்திறனாளிகள்
மாற்றுத்திறனாளிகளுக்கு வயது வரம்பு இல்லை. அவர்களுக்கு 50 மீ ஒட்டம், இறகுப்பந்து, பார்வைத்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கு 100 மீ ஒட்டம், சிறப்பு கையுந்துபந்து, மனவளர்ச்சி குன்றியோருக்கு 100 மீ ஒட்டம், எறிபந்து, செவித்திறன் பாதிக்கப்பட்டவர்களுக்கு 100 மீ ஓட்டம், கபடி ஆகிய போட்டிகள் ஶடத்தப்படுகிறது. அரசு ஊழியர்களுக்கு வயது வரம்பு இல்லை. அவர்களுக்கு கபடி, தடகளம், இறகு பந்து, கையுந்துபந்து, செஸ் போட்டிகள் நடக்கிறது.
பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் பிரிவு மற்றும் அரசு ஊழியர்கள் பிரிவில் தோந்தெடுக்கப்படும் நபர்கள் மாவட்ட அணி சார்பாக மாநிலப் போட்டிகளில் கலந்து கொள்வார்கள். தனிநபர் போட்டிகளில் தரவரிசையின்படி சிறந்த வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு மாநில போட்டிகளில் கலந்து கொள்வார்கள். அனைத்து விபரங்களும் இணையதளத்தில் உள்ளன.
முன்பதிவு
விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ள விரும்பும் உள்ள விளையாட்டு வீரர்கள் அனைவரும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் www.sdat.tn.gov.in என்ற இணைதளத்தில் பதிவு செய்ய வேண்டும். நேரடியாக போட்டிகளில் பங்கு பெற அனுமதி இல்லை.
மேலும் கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரை 7401703462 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.