காந்தல் நகராட்சி பள்ளியில் விளையாட்டு விழா


காந்தல் நகராட்சி பள்ளியில் விளையாட்டு விழா
x
தினத்தந்தி 23 Feb 2023 12:15 AM IST (Updated: 23 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

காந்தல் நகராட்சி பள்ளியில் விளையாட்டு விழா

நீலகிரி

ஊட்டி

ஊட்டி காந்தல் பகுதியில் நகராட்சி உருது நடுநிலை பள்ளி உள்ளது. இங்கு காந்தல் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் பள்ளியில் விளையாட்டு விழா நேற்று நடந்தது. இதற்கு பள்ளி தலைமை ஆசிரியர் முகமது அமீன் தலைமை தாங்கினார். பள்ளி மேலாண்மை குழு தலைவர் சமீனா முன்னிலை வகித்தார். இந்த விழாவில் பலூன் ஊதி உடைத்தல், 100 மீட்டர் ஓட்டப்பந்தயம், இசை நாற்காலி, சாக்கு ஓட்டம், இசையின் மூலம் பந்தை நகர்த்துதல், கூடைப்பந்து, ஸ்பூன் வித் லெமன், தண்ணீர் பந்து, பந்து சேகரித்தல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றது. இதில் பள்ளி மாணவ-மாணவிகள் ஏராளமானோர் ஆர்வமுடன் பங்கேற்றனர்.


Next Story