பாலிடெக்னிக் கல்லூரியில் விளையாட்டு விழா


பாலிடெக்னிக் கல்லூரியில் விளையாட்டு விழா
x
தினத்தந்தி 22 April 2023 12:15 AM IST (Updated: 22 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

பாவூர்சத்திரம் பாலிடெக்னிக் கல்லூரியில் விளையாட்டு விழா நடந்தது.

தென்காசி

பாவூர்சத்திரம்:

பாவூர்சத்திரம் எம்.எஸ்.பி.வேலாயுத நாடார் லெட்சுமி தாயம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் விளையாட்டு விழா நடைபெற்றது. கல்லூரியில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் இதரப் பணியாளர்களுக்கும் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. மாலையில் நடந்த பரிசளிப்பு விழாவில் ஆலங்குளம் துணை போலீஸ் சூப்பிரண்டு சகாய ஜோஸ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பேசினார். கல்லூரி நிர்வாக இயக்குனர்கள் எம்.எஸ்.பி.வி.கே. லெட்சுமி ஆனந்த் மற்றும் விஜூந்தா ராஜேஷ் ஆகியோர் தலைமை தாங்கினர். கல்லூரி முதல்வர் ரமேஷ் வரவேற்றார். கல்லூரியின் ஆலோசகர் பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார்.


Next Story