ராணி அண்ணா கல்லூரியில் விளையாட்டு விழா
நெல்லை ராணி அண்ணா கல்லூரியில் விளையாட்டு விழா நடைபெற்றது.
திருநெல்வேலி
பேட்டை:
நெல்லை பேட்டை ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரியில் 52-வது விளையாட்டு விழா நடைபெற்றது. நெல்லை மாவட்ட ஆக்கி கழக தலைவர் சேவியர் ஜோதி சற்குணம், மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று போட்டியை தொடங்கி வைத்தார். கல்லூரி முதல்வர் மைதிலி தலைமை தாங்கினார். உடற்கல்வி இயக்குனர் அமர் நிஷா வரவேற்றார். காலையில் நடைபெற்ற போட்டியில் தனி நபர்களுக்கான சாம்பியன் கோப்பைகள் வழங்கப்பட்டன. இந்த கோப்பையிணை மூன்றாம் ஆண்டு மாணவி பரமேஸ்வரி, முதலாம் ஆண்டு மாணவி முப்புடாதி, முதுகலை மாணவி மணிமாலா ஆகியோருக்கு சேவியர் ஜோதி சற்குணம் வழங்கினார். விழாவில் சிறப்பு விருந்தினராக ஜெயராஜ் அன்னபாக்கியம் பள்ளி தாளாளர் கேபிரியல் தேவா கலந்து கொண்டு, கைப்பந்து மைதானத்திற்கான தடுப்பு வலைகளை முதல்வர் மைதிலி, உடற்கல்வி ஆசிரியர் அமர் நிஷா ஆகியோரிடம் வழங்கினார்.
Related Tags :
Next Story