ஸ்ரீவித்யா விஹார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு விழா


ஸ்ரீவித்யா விஹார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு விழா
x

ஸ்ரீவித்யா விஹார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு விழாவை வில்வநாதன் எம்.எல்.ஏ. தொடங்கிவைத்தார்.

திருப்பத்தூர்

ஆம்பூர் ஸ்ரீவித்ய விஹார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் 15-வது விளையாட்டு விழா நடந்தது. பள்ளி தாளாளர் குப்புசாமி தலைமை தாங்கினார். இயக்குனர்கள் லோகநாயகி, விஜயலட்சுமி, துர்கா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி முதல்வர் டாக்டர் ஜெ.நடராஜன் வரவேற்று பேசினார்.

சிறப்பு அழைப்பாளர்களாக ஆம்பூர் எம்.எல்.ஏ. அ.செ.வில்வநாதன், தாசில்தார் மகாலட்சுமி மற்றும் ஆம்பூர் ஸ்டேட் வங்கி கிளை மேலாளர் சுந்தர்ஜி ஆகியோர் கலந்துகொண்டு மாணவப்படையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு விளையாட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தனர். தொடர்ந்து போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரை ஆற்றினர்.

விழாவில் இயக்குனர் டாக்டர் சரவணன் மற்றும் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியர் ராமூர்த்தி நன்றி கூறினார்.



Next Story