பொது சுகாதார துறையினருக்கு விளையாட்டு போட்டி
பொது சுகாதார துறையினருக்கு விளையாட்டு போட்டி
திருப்பூர்
பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை தொடங்கி 100 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி திருப்பூர் மாநகராட்சி சார்பில் விளையாட்டு போட்டிகள் திருப்பூர் மாநகராட்சி அளவில் திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் விளையாட்டு மேம்பாட்டு ஆணைய பல்நோக்கு விளையாட்டு உள்அரங்கில் நடைபெற்றது.
இதில் மட்டைப்பந்து (ஆண்கள்), செஸ், இறகுபந்து, சுண்டாட்டம், கைப்பந்து, மேசைப்பந்து, ஓட்டப்பந்தயம், இசை நாற்காலி, கயிறு இழுக்கும்போட்டி, லெமன் ஸ்பூன், குண்டு எறிதல், கோலப்போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது.
மேயர் தினேஷ்குமார், ஆணையாளர் கிராந்திகுமார் பாடி ஆகியோர் விளையாட்டு அரங்குக்கு சென்று வெற்றி பெற்றவர்களை வாழ்த்தினார்கள். இதில் மாநகர் நல அதிகாரி கவுரி சரவணன், டாக்டர்கள் பிரவீன் அரவிந்த், கார்த்திக், பூரணி ஆஷா, வினோதினி, சுகாதார அலுவலர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.