பள்ளிகளில் விளையாட்டு போட்டிகள்
பள்ளிகளில் விளையாட்டு போட்டிகள்
திருப்பூர்
பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற திட்டம் இந்திய அரசால் கடந்த 2015-ம் ஆண்டு ஜனவரி மாதம் 22-ந் தேதி தொடங்கப்பட்டது. இந்த திட்டம் பாலின பாகுபாடு அடிப்படையில் குழந்தைகளின் பாலினம் அறிவதை தடுப்பதற்காகவும், பெண் குழந்தைகளின் உயிர் வாழ்வதையும், பாதுகாப்பையும் உறுதி செய்து அவர்களின் கல்வியை மேம்படுத்துவதும் ஆகும்.
இந்த திட்டத்தை செயல்படுத்தும் வகையில் வருகிற 24-ந் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகள் திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற உள்ளது. அதன்படி இன்று (வெள்ளிக்கிழமை) அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் விளையாட்டு போட்டிகள், கட்டுரைப்போட்டி, ஓவியப்போட்டி, பேச்சுப்போட்டி போன்ற போட்டிகள் நடத்தப்பட உள்ளது.
வருகிற 23-ந் தேதி 'பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்' என்பதை வலியுறுத்தி பேரணி, மரம் நடுவிழா, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது.
இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.