காழ்ப்புணர்ச்சியின் காரணமாக வசவுகளை அள்ளி தெளிப்பதா? எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் சக்கரபாணி கண்டனம்


காழ்ப்புணர்ச்சியின் காரணமாக வசவுகளை அள்ளி தெளிப்பதா? எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் சக்கரபாணி கண்டனம்
x

காழ்ப்புணர்ச்சியின் காரணமாக வசவுகளை அள்ளி தெளிப்பதா? எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் சக்கரபாணி கண்டனம்.

சென்னை,

உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் அர.சக்கரபாணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-

தர்மபுரி மாவட்டத்தில் வெற்றிலைக்காரன்பள்ளம் கிடங்கில் 22 ஆயிரத்து 273 டன் நெல் இருப்பு வைக்கப்பட்டிருந்தது. அதில் 7 ஆயிரத்து 174 டன் அரவைக்கு அனுப்பியதுபோக 15 ஆயிரத்து 99 டன் இருப்பு உள்ளது. இதிலிருந்து தான் 7 ஆயிரம் டன் இருப்பில் இல்லை என்று இரு தரப்பினர் முரணாக கூறுவதாக கேள்விக்குறியுடன் செய்தி வந்ததை பார்த்தவுடனே தர்மபுரி மாவட்ட கலெக்டரையும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக மேலாண்மை இயக்குனரையும் அந்த கிடங்கில் 100 சதவீத தணிக்கை செய்து உண்மைத்தன்மையை அறிய ஏற்பாடு செய்ய ஆணையிட்டுள்ளேன்.

அதற்குள் அவசரப்பட்டு வெளிநாட்டு முதலீடுகளை உண்மையிலேயே ஈர்த்து வரும் நம் முதல்-அமைச்சர் மீதுள்ள காழ்ப்புணர்ச்சியின் காரணமாகவும் தன்னால் செய்யமுடியாத ஒன்றை செய்கிறாரே என்று பொறாமையின் உச்சகட்டத்தில், ஆராயாமல், வசவுகளை அள்ளித் தெளிக்கிறார் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி. தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க தயங்காது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story