கும்பகோணம் படைவெட்டி மாரியம்மன் கோவிலில் வசந்த உற்சவம்
கும்பகோணம் படைவெட்டி மாரியம்மன் கோவிலில் வசந்த உற்சவம்
கும்பகோணம்:
கும்பகோணம் மடத்து தெரு பகுதியில் படைவெட்டி மாரியம்மன் பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் வசந்த உற்சவம் மற்றும் காளியம்மன் திருநடன வீதி உலா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான வசந்த உற்சவம் நேற்றுமுன்தினம் காலை சிறப்பு யாகம் - காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. நேற்று பத்ரகாளி அம்மன் திரு நடன வீதி உலா தொடங்கியது. இன்று (வியாழக்கிழமை) சவுராஷ்ட்ரா நடுத்தெரு பகுதியில் ஊஞ்சல் உற்சவமும், நாளை மறுநாள் (சனிக்கிழமை) பல்லயம் படையலிட்டு சிறப்பு வழிபாடு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. வருகிற 20-ந் தேதி பத்ரகாளியம்மன் கோவிலுக்கு திரும்பும் நிகழ்ச்சியும், 21, 22 ஆகிய தேதிகளில் படைவெட்டி மாரியம்மன் வீதி உலாவும் நடைபெறுகிறது. 23-ந்தேதி அம்மனுக்கு காய்கனி அலங்காரமும், 25-ந்தேதி புஷ்பாங்கி சேவையும், 26-ந்தேதி பேச்சியம்மன் படையல் மற்றும் விடையாற்றி உற்சவத்துடன் திருவிழா முடிவடைகிறது.