மிளகாய் பொடி தூவி 2 பவுன் நகை பறிப்பு
மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் மீது மிளகாய் பொடி தூவி 2 பவுன் நகை பறித்து சென்றனர்.
காரியாபட்டி,
மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் மீது மிளகாய் பொடி தூவி 2 பவுன் நகை பறித்து சென்றனர்.
மிளகாய்பொடி தூவினர்
நரிக்குடி அருகே சிறுவனூர் கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திக். இவருடைய இவரது மகள் குருதேவி (வயது 19). இவர்கள் இருவரும் மதுரை செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் அ.முக்குளம் அருகே புல்வாய்க்கரை மின்வாரிய அலுவலகம்அருகே சென்றுகொண்டிருந்தனர்.
அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்மநபர்கள் நரிக்குடிக்கு எந்த வழியாக செல்ல வேண்டும் என வழிகேட்டுள்ளனர். உடனே கார்த்திக் நீங்கள் வந்த வழியாகவே செல்லுங்கள் என்று தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி கூறியுள்ளார்.
அப்போது அந்த மர்மநபர்கள் கையில் வைத்திருந்த மிளகாய்பொடியை கார்த்திக் மற்றும் குருதேவி மீது தூவினர்.
தொடர்திருட்டு
இதையடுத்து குருதேவி கழுத்தில் கிடந்த 2 பவுன் தங்க நகையை பறித்துக்கொண்டு அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் மர்மநபர்கள் தப்பி சென்றுவிட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த நரிக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராம நாராயணன், அ.முக்குளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் குறித்து இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நரிக்குடி பகுதியில் தொடர்ந்து செயின்பறிப்பு சம்பவம் நடைபெற்று வருகிறது. எனவே நரிக்குடி பகுதியில் போலீசார் தீவிர ரோந்துபணியை மேற்கொள்ள வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.