பனிப்பொழிவில் இருந்து பாதுகாக்க தேயிலை கொழுந்துகளுக்கு 'ஸ்பிரிங்ளர்' மூலம் தண்ணீர் பாய்ச்சும் பணி


பனிப்பொழிவில் இருந்து பாதுகாக்க தேயிலை கொழுந்துகளுக்கு ஸ்பிரிங்ளர் மூலம் தண்ணீர் பாய்ச்சும் பணி
x
தினத்தந்தி 21 Jan 2023 12:30 AM IST (Updated: 21 Jan 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரி பகுதியில் பனிப் பொழிவில் இருந்து தேயிலை கொழுந்துகளைப் பாதுகாக்க செடிகள் மீது தேயிலை கொழுந்துகளுக்கு ‘ஸ்பிரிங்ளர்’ மூலம் தண்ணீர் பாய்ச்சும் பணி மூலம் தண்ணீர் பாய்ச்சி, தேயிலை செடிகளை விவசாயிகள் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நீலகிரி

கோத்தகிரி

கோத்தகிரி பகுதியில் பனிப் பொழிவில் இருந்து தேயிலை கொழுந்துகளைப் பாதுகாக்க செடிகள் மீது தேயிலை கொழுந்துகளுக்கு 'ஸ்பிரிங்ளர்' மூலம் தண்ணீர் பாய்ச்சும் பணி மூலம் தண்ணீர் பாய்ச்சி, தேயிலை செடிகளை விவசாயிகள் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கொட்டித்தீர்க்கும் உறைபனி

கோத்தகிரி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து மழை பெய்து வந்தது. மேலும் பனிமூட்டம் மற்றும் போதிய சூரிய வெளிச்சம் இல்லாததால், தேயிலை செடிகளில் கொப்புள நோய் தாக்கி வந்தது. இருப்பினும் தேயிலை விளைச்சல் போதுமானதாக இருந்தது வந்தது. மேலும் மழை தொடர்ந்து பெய்து வந்ததால் பனிப் பொழிவின் தாக்கம் காணப்படவில்லை.

இந்தநிலையில் கடந்த வாரம் முழுவதும் நீர்பனிப் பொழிவு இருந்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக கோத்தகிரி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் உறைபனி கொட்டித் தீர்த்தது. இதனால் தாழ்வானப் பகுதிகளில் உள்ள விவசாயிகளின் தேயிலைத் தோட்டங்களில் இருந்த செடிகள் கருகின.

'ஸ்பிரிங்ளர்' மூலம் தண்ணீர்

மேலும் இந்த உறைபனி காரணமாக விவசாய பயிர்கள் அனைத்தும் கருகி வருகின்றன. இதன் தாக்கத்தில் இருந்து பாதுகாக்க போதுமான தண்ணீர் வசதியுள்ள பகுதிகளில் விவசாயிகள் தேயிலைத் தோட்டங்களுக்கு ஸ்பிரிங்ளர் மூலம் தேயிலைத் தண்ணீர் பாய்ச்சி வருகிறார்கள். மேலும் தண்ணீர் வசதியில்லாத தோட்டங்களில் நிழல் தருவதற்காக வளர்க்கப்பட்டுள்ள சில்வர் ஓக் மரங்களின் கிளைகளை வெட்டி அகற்றி, சூரிய வெளிச்சம் படுமாறு செய்து வருவதுடன், தாகைகளை (இலைத் தலைகளை) தேயிலை செடிகளின் மேல் பரப்பி, பனிப்பொழிவால் தேயிலை கொழுந்துகள் மற்றும் செடிகள் கருகாத வண்ணம் பாதுகாத்து வருகின்றனர். இனி மழை பெய்தால் மட்டுமே மீண்டும் தேயிலை செடிகளில் கொழுந்துகள் செழித்து வளர்வதுடன், சாகுபடியும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.



Next Story