ஸ்ரீதேவிமங்களம்-தெரணிபாளையம் மின் பிரிவு அலுவலகம் மாற்றம்


ஸ்ரீதேவிமங்களம்-தெரணிபாளையம் மின் பிரிவு அலுவலகம் மாற்றம்
x

ஸ்ரீதேவிமங்களம்-தெரணிபாளையம் மின் பிரிவு அலுவலகம் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

பெரம்பலூர்

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பெரம்பலூர் மின் பகிர்மான வட்டம், பெரம்பலூர் கோட்டம், சிறுவாச்சூர் உபகோட்டம் பாடாலூர் பிரிவுக்குட்பட்ட ஸ்ரீதேவிமங்களம் மின் பகிர்மானத்தில் உள்ள மின் இணைப்புகளை திருச்சி பெருநகரம் மின்பகிர்மான வட்டம், ஸ்ரீரங்கம் கோட்டம், சமயபுரம் உப கோட்டம், சிறுகனூர் பிரிவிற்கும், இதேபோல் தெரணிபாளையம் மின் பகிர்மானத்தில் உள்ள மின் இணைப்புகளை லால்குடி கோட்டம், கல்லக்குடி உபகோட்டம் புள்ளம்பாடி பிரிவிற்கும் மின்வட்ட சீரமைப்பு காரணமாக வருவாய் கிராமம் உள்ள மாவட்டத்தில் இணைக்க வேண்டியுள்ளது. எனவே திருச்சி மாவட்டத்தில் உள்ள திருச்சி பெருநகரம் மின்பகிர்மான வட்டம், ஸ்ரீரங்கம் கோட்டம், சமயபுரம் உபகோட்டம், சிறுகனூர் பிரிவிற்கு ஸ்ரீதேவிமங்களம் மின்பகிர்மானத்தில் உள்ள மின் இணைப்புகளையும், தெரணிபாளையம் மின் பகிர்மானத்தில் உள்ள மின் இணைப்புகளை புள்ளம்பாடி பிரிவிற்கும் நேற்று முன்தினம் முதல் மாற்றம் செயப்பட்டுள்ளது. எனவே மின்சாரம் சம்பந்தமான அனைத்திற்கும் ஸ்ரீதேவிமங்களம் மின் பகிர்மானத்தில் உள்ள மின் பயனாளிகள் சிறுகனூர் பிரிவு அலுவலகத்தையும், தெரணிபாளையம் மின் பகிர்மான மின் பயனாளிகள் புள்ளம்பாடி பிரிவு அலுவலகத்தை அணுக வேண்டும், என்று பெரம்பலூர் செயற்பொறியாளர் அசோக்குமார் தெரிவித்துள்ளார்.


Next Story