தெற்கு ரெயில்வேயின் முதன்மை தலைமை இயக்க மேலாளராக ஸ்ரீகுமார் பதவியேற்பு
தெற்கு ரெயில்வேயின் முதன்மை தலைமை இயக்க மேலாளராக ஸ்ரீகுமார் நேற்று பதவியேற்றுக்கொண்டார்.
சென்னை,
தெற்கு ரெயில்வேயின் முதன்மை தலைமை இயக்க மேலாளராக ஸ்ரீகுமார் நேற்று பதவியேற்றுக்கொண்டார். இதற்கு முன் இந்தப்பதவியில் இருந்த நீனுல்தியாரா தெற்கு ரெயில்வேயின் முதன்மை தலைமை வணிக மேலாளராக பொறுப்பேற்றுக்கொண்டார்.
தெற்கு ரெயில்வேயின் முதன்மை தலைமை இயக்க மேலாளராக பொறுப்பேற்றுள்ள ஸ்ரீகுமார் இந்திய ரெயில்வே போக்குவரத்து சேவையில் 1989-ம் ஆண்டு பிரிவைச்சேர்ந்தவர் ஆவார். தெற்கு ரெயில்வேயின் இயக்கப்பிரிவில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி உள்ளார்.
மேலும், தெற்கு ரெயில்வே மற்றும் தென்மேற்கு ரெயில்வேயின் பல்வேறு கோட்டங்களில் வணிகம், தகவல் தொடர்பு, விஜிலென்ஸ் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் மற்றும் பொறுப்புகளிலும் பணிபுரிந்துள்ளார்.
Related Tags :
Next Story