மீனவர்கள் மீதான இலங்கை கடற்படை தாக்குதல்: அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து போராட வேண்டும் -கி.வீரமணி


மீனவர்கள் மீதான இலங்கை கடற்படை தாக்குதல்: அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து போராட வேண்டும் -கி.வீரமணி
x

மீனவர்கள் மீதான இலங்கை கடற்படை தாக்குதல்: அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து போராட வேண்டும் கி.வீரமணி அழைப்பு.

சென்னை,

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை கடற்படையாலும், கடற்கொள்ளையர்களாலும் தாக்கப்படுவது, கொல்லப்படுவது அன்றாட செய்தியாகி விட்டது. இதனை தடுத்து நிறுத்தவேண்டியது மத்திய பா.ஜ.க. அரசுதான்.

ஆனால் மத்திய அரசு, தமிழர்கள் என்பதால் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் அணுகுகிறது. இந்த பிரச்சினைக்கு முடிவு கட்ட அனைத்து கட்சியினரும் ஒருங்கிணைந்து போராட முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story