ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளி 22 ஆண்டுகளாக தொடர்ந்து 100 சதவீதம் தேர்ச்சி
ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளி 22 ஆண்டுகளாக தொடர்ந்து 100 சதவீதம் தேர்ச்சி பெற்றனர்.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை திருக்கோகர்ணத்தில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் ஆவிச்சி விஸ்வநாதன் 591 மதிப்பெண்ணும், ஆயிஷா ஷிபானா 590 மதிப்பெண்ணும், முத்து வடிவேல் 589 மதிப்பெண்ணும் பெற்றுள்ளனர். இப்பள்ளி தொடர்ந்து 22 ஆண்டுகளாக நூறு சதவீதம் தேர்ச்சி பெற்று வருகிறது. வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளியின் முதல்வர் தங்கம் மூர்த்தி, பள்ளியின் ஆலோசகர் அஞ்சலிதேவி, நிர்வாக இயக்குனர் நிவேதிதா மூர்த்தி, துணை முதல்வர் குமாரவேல், ஒருங்கிணைப்பாளர்கள் அபிராமசுந்தரி, கவுரி உள்பட பலர் பாராட்டினர்.
Related Tags :
Next Story