ஸ்ரீவைகுண்டம் பகுதியில் சனிக்கிழமை மின் தடை
ஸ்ரீவைகுண்டம் பகுதியில் சனிக்கிழமை மின் தடை செய்யப்படுகிறது.
ஸ்ரீவைகுண்டம்:
ஸ்ரீவைகுண்டம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் சந்திரன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சீரான மின் விநியோகம் வழங்கிட ஸ்ரீவைகுண்டம் உப மின் நிலையம் சிவந்திப்பட்டி மின்தொடரில் பொண்ணன்குறிச்சி, சுப்பிரமணியபுரம், ஆதிச்சநல்லுர், ஆகிய இடங்களிலும் மற்றும் கீீழவல்லநாடு மின் தொடரில் ஆறாம்பண்ணை, நடுவக்குறிச்சி, ஆகிய இடங்களிலும், மஞ்சள்நீர்க்காயல் உபமின் நிலையம் ஏரல் மின் தொடரில் உமரிக்காடு, ஆத்தங்கரைஆகிய இடங்களில் இன்று(சனிக்கிழமை) மராமத்து பணிகள் நடக்கிறது. இதேபோன்று ஸ்ரீவைகுண்டம் உபமின் நிலையம் சிவந்திப்பட்டி மின் தொடரில் ராமனுஜம்புதூர், சேரகுளம், வெட்டிக்குளம், சின்னார்குளம், சிரியந்துர், தீராத்திக்குளம் ஆகிய இடங்களிலும் சீரான மின் விநியோகம் கிடைக்க பணிகள் நடைபெறஉள்ளதால் மேற்கண்ட பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் தடை செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.