ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் சுவாமி கோவிலில்சித்திரை திருவிழா தேரோட்டம்


தினத்தந்தி 20 April 2023 12:15 AM IST (Updated: 20 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் சுவாமி கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி

ஸ்ரீவைகுண்டம்:

ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் சுவாமி கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

சித்திரை திருவிழா

நவதிருப்பதிகளில் முதல் ஸ்தலமான ஸ்ரீவைகுண்டம் கள்ளப்பிரான் சுவாமி பெருமாள் கோவில் சித்திரை திருவிழா கடந்த மாதம் 11-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை பெருமாள் தங்க தோளுக்கினியானில் திருவீதி புறப்பாடும் திருமஞ்சனமும் தீர்த்த விநியோக கோஷ்டியும் நடந்தது. மாலை 6மணிக்கு யானை வாகனம், புஷ்பபல்லக்கு, குதிரை வாகனம், வெற்றிவேர் சப்பரம் ஆகிய வாகனங்களில் சுவாமி திருவீதி புறப்பாடு நடைபெற்றது.

தேரோட்டம்

திருவிழாவின் முக்கிய நிகழ்வான சித்திரை தேரோட்டத்தை முன்னிட்டு நேற்று அதிகாலை 5.30மணிக்கு கள்ளபிரான் சுவாமி கொடிமரம் சுற்றி எழுந்தருளலும், 6மணிக்கு மேல் சுவாமி கோவிலில் இருந்து புறப்பட்டு திருத்தேரில் எழந்தருளினார். திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். வழிநெடுகிலும் வீடுகளில் பக்தர்களுக்கு குளிர்பானங்கள், தண்ணீர் வழங்கினர். தெற்கு முத்தாரம்மன் கோவில், பழையதாலுகா அலுவலகம் வழியாக தபால்நிலையம் சாலையிலிருந்து தேர் மதியம் 12 மணியளவில் கள்ளபிரான் கோவில் முன்பு தேர் நிலைவந்து சேர்ந்தது. இதனைதொடர்ந்து மாலை 3மணியளவில் கோவில் முன்பிருந்து மீண்டும் புறப்பட்ட தேர் மாலை 6.30 மணிக்கு மீண்டும் நிலையைத்தை வந்து அடைந்தது. தேரோட்டத்தில் தாசில்தார் ராதாகிருஷ்ணன், மாவட்ட அறங்காவலர் குழுத்தலைவர் பார்த்திபன், கோவில் நிர்வாக அதிகாரிகோவலமணிகண்டன், தக்கார் அஜித், ஆய்வாளர் நம்பி மற்றும் பக்தர்கள் கோவில் பணியாளர்கள், பேரூராட்சி பணியாளர்கள் கலந்துகொண்டனர்.


Next Story