ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சி அலுவலகத்தைபிரதமரின் வீடு வழங்கும் திட்ட பயனாளிகள் முற்றுகை


ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சி அலுவலகத்தைபிரதமரின் வீடு வழங்கும் திட்ட பயனாளிகள் முற்றுகை
x
தினத்தந்தி 21 Feb 2023 12:15 AM IST (Updated: 21 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சி அலுவலகத்தை பிரதமரின் வீடு வழங்கும் திட்ட பயனாளிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி

ஸ்ரீவைகுண்டம்:

பாரத பிரதமரின் வீட்டு வசதி திட்டம் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் நகர்ப்புற பகுதிகளில் உள்ள வீடு இல்லாதோருக்கு ரூ.2.10 லட்சம் நிதி உதவியுடன் புதிதாக வீடு கட்ட அனுமதிக்கப்பட்ட பயனாளிகளுக்கு உடனடியாக நிலுவைத் தொகையை வழங்க கோரி ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சி அலுவலகத்தை பயனாளிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 13-வது வார்டு கவுன்சிலர் உச்சிமாகாளி ராமகிருஷ்ணன் தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில் 20 பயனாளிகள் பங்கேற்றனர். பின்னர் பேரூராட்சி செயல் அலுவலர் மகேஷ்வரனிடம் கோரிக்கை கோரிக்கை மனு அளித்துவிட்டு கலைந்து சென்றனர்.


Next Story