ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி ஆற்றில்காணும் பொங்கல் பண்டிகை கோலாகலம்


ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி ஆற்றில்காணும் பொங்கல் பண்டிகை கோலாகலம்
x
தினத்தந்தி 18 Jan 2023 12:15 AM IST (Updated: 18 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி ஆற்றில் காணும் பொங்கல் பண்டிகை கோலாகலமாக நடந்தது.

தூத்துக்குடி

ஸ்ரீவைகுண்டம்:

ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி ஆற்றில் காணும் பொங்கல் பண்டிகை 5 ஆண்டுகளுக்கு பிறகு கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில் சுற்றுவட்டார கிராம மக்கள் குடும்பத்தினருடன் உற்சாகமாக பங்கேற்றனர்.

காணும் பொங்கல்

ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி ஆற்றில் 5 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று காணும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது. இப்பண்டிகையை முன்னிட்டு நேற்று இரவு தாமிபரணி ஆற்று பகுதி வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

பண்டிகை தொடக்க விழாவிற்கு ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சி தலைவர் சினேகவள்ளி பாலமுருகன் தலைமை தாங்கினார். பண்டிகையை முன்னிட்டு குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்ட ஆயிரத்து 200 பேருக்கு ரூ.5 லட்சம் மதிப்பிலான பரிசு பொருட்களை வழங்கினார்.

பாராம்பரிய விளையாட்டுகள்

கிராம உதயம் மேல ஆழ்வார்தோப்பு கிளை அலுவலகம் சார்பில் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சிலம்பு பயிற்சி பள்ளி மாஸ்டர் சுப்பையா தலைமையில் மாணவ, மாணவிகள் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பம், வாள் வீச்சு சுருள் வீச்சு உள்ளிட்ட பல்வேறு வீர விளையாட்டுகளை செய்து காட்டினர். பானை உடைத்தல் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளை பொதுமக்கள் விளையாடி மகிழ்ந்தனர். வீடுகளில் மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் என தரம் பிரித்து வைக்க 500 பேருக்கு குப்பை தொட்டிகள் இலவசமாக வழங்கப்பட்டது.

கலந்து கொண்டவர்கள்

தொடக்க நிகழ்ச்சியில் தி.மு.க மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பாலமுருகன், ஒன்றிய செயலாளர் கொம்பையா, நகர செயலாளர் சுப்புராஜ், அகில இந்திய பார்வர்டு பிளாக் மாநில இளைஞரணி தலைவர் சுரேஷ் தேவர், வியாபாரிகள் சங்கத் தலைவர் காளியப்பன், விவசாய சங்க தலைவர் வெள்ளூர் அலங்காரம், நேதாஜி இளைஞர் படை தலைவர் ராமசாமி, மாவட்ட தொழிற்சங்க செயலாளர் ராமகிருஷ்ணன், பேரூராட்சி துணைத் தலைவர் கன்னியம்மாள்சண்முகசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story