ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் சுந்தராட்சி அம்மன் கோவில் திருவிழா
ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் சுந்தராட்சி அம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது.
தட்டார்மடம்:
சாத்தான்குளம் அருகே ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் சுந்தராட்சி அம்மன், தடிக்காரன் சுவாமி கோவில் ஐப்பசி கொடை விழா 2 நாட்கள் நடைபெற்றது.
முதல் நாள் இரவு 7 மணிக்கு 1008 திருவிளக்கு பூஜை, 9 மணிக்கு மாக்காப்பு பூஜை, தீபாராதனை, அன்னதானம் நடைபெற்றது. 2-ஆம் நாள் காலை 8மணிக்கு ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி ஆற்றிலிருந்து புனித நீர் கொண்டு வருதல், தொடர்ந்து கணபதி ஹோமம், நேர்த்திக்கடன் பொருள்கள் கோவிலுக்கு கொண்டு வருதல், அம்மனுக்கு 108 வகையான அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது. மாலை 6மணிக்கு அம்மனுக்கு பொங்கலிடுதல், இரவு 10 மணிக்கு கரகாட்டம், நள்ளிரவு 12மணிக்கு மது பொங்கலிடுதல், தொடர்ந்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பூஞ்சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வருதல் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.