நெமிலி பாலா படத்தில் ஸ்ரீவித்யா பூஜை


நெமிலி பாலா படத்தில் ஸ்ரீவித்யா பூஜை
x

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்காக நெமிலி பாலா படத்தில் ஸ்ரீவித்யா பூஜை நடந்தது.

ராணிப்பேட்டை

நெமிலி

நெமிலி ஸ்ரீபாலா பீடத்தில் பொதுத்தேர்வில் மாணவ-மாணவிகள் சிறப்பாக தேர்வு எழுதி அதிக மதிப்பெண்கள் பெற வேண்டி ஸ்ரீவித்யா பூஜை நடந்தது. செயலாளர் முரளிதரன் அனைவரையும் வரவேற்றார்.

பாலா பீட நிர்வாகி மோகன்ஜி ஸ்ரீவித்யா பூஜை செய்து அன்னை பாலாவை ஆராதனை செய்தார். தொடர்ந்து குருஜி நெமிலி பாபாஜி எழுதிய ஸ்ரீ வித்யாஸ்துதி ஒலிபரப்பப்பட்டது.

பூஜையில் நெமிலி விவேகானந்தா உயர்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அவர்களுக்கு ஸ்ரீபாலா பீடாதிபதி கவிஞர் நெமிலி எழில்மணி அன்னை பாலா குங்குமம், புகைப்படம், எழுதுகோல் ஆகியவற்றை வழங்கி ஆசீர்வதித்தார்.


Next Story