ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் யானை தாக்கப்பட்ட விவகாரம் - அசாம் வனத்துறை அதிகாரிகள் ஆய்வு


ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் யானை தாக்கப்பட்ட விவகாரம் - அசாம் வனத்துறை அதிகாரிகள் ஆய்வு
x

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் யானை ஜெய மால்யதாவை அசாம் வனத்துறை அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர்,

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆண்டாள் கோயியிலுக்கு அசாம் மாநிலத்தில் இருந்து கடந்த 2011ஆம் ஆண்டு பெண் யானை கொண்டு வரப்பட்டது. இதற்கு ஜெயமால்யதா என்ற கோயில் யானை மண்டபதில் வைத்து வளர்க்கப்பட்டு வந்த நிலையில், யானை தினசரி ஆண்டாள் ரெங்கமன்னாரை தரிசித்துவிட்டு வீதி உலா புறப்பட்டு நிகழ்ச்சிக்கு வந்து செல்லும்.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தேக்கம்பட்டி புத்துணர்வு முகாமில் வைத்து யானை தாக்கப்பட்டதை தொடர்ந்து யானை பாகன்கள் இரண்டு பேர் பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டனர்.புதிய பாகன்கள் நியமிக்கப்பட்டு தற்போது யானை நன்கு பராமரிக்கப்பட்டு வருகிறது. மேலும் யானை தாக்கப்படுவதாக தொடர்ந்து வீடியோ வதந்தி பரவுகிறது.

இந்நிலையில், தற்போது ரூ. 11 லட்சம் செலவில் யானைக்காக கிருஷ்ணன்கோவிலில் நீச்சல் குளம் மற்றும் நவீன வசதிகளுடன் பெரிய மின்விசிறி மற்றும் குளிப்பதற்கு ஷவர்கள் அமைக்கப்பட்டு செயல் படுத்தப்பட்டு வருகிறது.

இதனை தொடர்ந்து யானை தாக்கப்படுவதாக அடிக்கடி சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரலான நிலையில் தமிழக அரசு சிறப்பு குழு அமைத்து யானை தாக்கப்பட்டதா தற்போது யானை நிலைமை என்ன என்பது குறித்து ஆய்வு செய்தனர். ஆய்வின் முடிவில் யானை நலமுடன் இருப்பதாக தமிழக அரசுக்கு அக்குழு அறிக்கை சமர்ப்பித்தது.

இந்த நிலையில் யானை அசாமில் இருந்து கொண்டு வரப்பட்டதால் அசாமை சேர்ந்த வன பாதுகாவலர் அசாம் உயர் நீதிமன்றத்தில் யானையை மீண்டும் அசாமிற்கு கொண்டு வர வேண்டும் என மனுதாக்கல் செய்தார்.

இதனையடுத்து அசாம் வன பாதுகாவலர் ஹித்தேஷ்மிஸ்ரா, காவல் கண்காணிப்பாளர் அபர்ணாநடராஜன், வன உயிரின பேராசிரியர் பத்மஸ்ரீ கே.கே.ஷர்மா, ரூப்ஜித்காகாதீ, மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த துணை வன பாதுகாவலர் டாக்டர் நாகநாதன், டாக்டர் சுகுமார், மற்றும் அந்தோனிரூபின் உள்ளிட்ட சிறப்பு குழுவினர் யானையை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.


Next Story