ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேரை தயார்படுத்தும் பணி தொடக்கம்


ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேரை தயார்படுத்தும் பணி தொடக்கம்
x

ஆகஸ்டு 1-ந் தேதி நடைபெற உள்ள ஆடிப்பூர திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேரை தயார்படுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஆகஸ்டு 1-ந் தேதி நடைபெற உள்ள ஆடிப்பூர திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேரை தயார்படுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

ஆண்டாள் கோவில்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆண்டுதோறும் ஆடிமாதம் ஆடிப்பூரத்தன்று திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இதில் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வது வழக்கம்.

இந்தநிலையில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தேரோட்ட திருவிழா நடைபெறவில்லை. இதற்கு பதிலாக கோவில் வளாகத்திற்குள்ளேயே தங்க தேர் இழுக்கப்பட்டது.

தேரை தயார்படுத்தும் பணி

இந்தநிலையில் இந்த ஆண்டு ஆடிப்பூர திருவிழா வருகிற ஆகஸ்டு 1-ந் தேதியன்று நடைபெறுகிறது.

இந்த விழாவிற்கான நாள் செய்யும் நிகழ்ச்சி இன்று (வெள்ளிக்கிழமை) காலை 8 மணிக்கு கீழ ரதவீதியில் உள்ள தேர் முன்பு நடைபெறுகிறது. விழாவையொட்டி தேர்தயார்படுத்தும் பணி தொடங்கப்பட்டது. முன்னதாக தேரை புதுப்பிக்கும் பணி ஆரம்பிக்க தேரை சுற்றி உள்ள தகரக்கொட்டகைகள் அகற்றப்பட்டன. இந்த ஆண்டு திருவிழா மிகவும் சிறப்பாக கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி முத்துராஜா ஆகியோர் தெரிவித்தனர்.


Next Story