நடைபோட்டியில் முதலிடம் பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூர் சப்-இன்ஸ்பெக்டர்


நடைபோட்டியில் முதலிடம் பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூர் சப்-இன்ஸ்பெக்டர்
x

நடைபோட்டியில் முதலிடம் பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூர் சப்-இன்ஸ்பெக்டர்

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர்

ஸ்ரீவில்லிபுத்தூர் இலக்கு படை பிரிவு சப்-இன்ஸ்பெக்டராக இருப்பவர் கிருஷ்ணமூர்த்தி. இவர் கனடா நாட்டில் நடைபெற்ற உலக அளவில் காவல்துறையினர் பங்கேற்ற வேக நடை போட்டியில் முதலிடம் பிடித்து வெற்றி பெற்று தங்க பதக்கம் வென்றுள்ளார்.

கனடாவில் உலக அளவில் பல்வேறு நாடுகளை சேர்ந்த போலீசார் பங்கேற்ற தடகளப் போட்டிநடைபெற்று வருகிறது. அதில் இந்தியா சார்பில் பங்கேற்றவர்களில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தியும் ஒருவர். இவர் அங்கு நடைபெற்ற 5 ஆயிரம் மீட்டர் வேக நடை போட்டியில் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கத்தை பெற்றார். ஏற்கனவே இவர் கடந்த 2019-ம் ஆண்டில் சீனாவில் நடைபெற்ற 5000 மீட்டர் வேக நடை போட்டியில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் பெற்று இருந்தார். கடந்த ஆண்டு 2022-ல் நெதர்லாந்தில் நடைபெற்ற 5000 மீட்டர் வேக நடை போட்டியில் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் பெற்றிருந்தார். அந்த வகையில் தற்போது கனடாவில் தங்கப்பதக்கம் பெற்று சாதனை படைத்து உள்ளார். தங்கப்பதக்கம் பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்திக்கு போலீஸ் அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.


Next Story