மாணவனின் சைக்கிள் திருட்டு
மாணவனின் சைக்கிள் திருட்டு
திருப்பூர்
அருள்புரம்
திருப்பூர் அருகே கரைப்புதூர் ஊராட்சி செந்தூரன் காலனியை சேர்ந்தவர் பிரபு (வயது 38). இவருடைய மகன் கவுதம் ( 14). அண்ணாநகர் பகுதியில் டியூசன் படிப்பதற்காக சைக்கிளை வெளியே நிறுத்தி விட்டு சென்றுள்ளார். டியூசன் முடிந்த பிறகு வந்து பார்த்தபோது சைக்கிளை காணவில்லை. இது குறித்து அருகில் உள்ள கடையின் கண்காணிப்பு கேமராவில் பார்த்த போது மர்ம நபர் சைக்கிளை திருடி செல்லும் காட்சி பதிவாகி உள்ளது. இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறும்போது " இந்த பகுதியில் அடிக்கடி திருட்டு சம்பவங்கள் நடந்து வருகிறது. எனவே போலீசார் ரோந்து வர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்கள்
----------
Related Tags :
Next Story