பணியில் இருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மாரடைப்பால் சாவு


பணியில் இருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மாரடைப்பால் சாவு
x
தினத்தந்தி 9 July 2023 12:45 AM IST (Updated: 9 July 2023 12:45 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பணியில் இருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மாரடைப்பால் பரிதாபமாக இறந்தார்.

திருவாரூர்

திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பணியில் இருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மாரடைப்பால் பரிதாபமாக இறந்தார்.

சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்

திருவாரூர் காகிதக்கார தெருவை சேர்ந்தவர் சந்திரசேகரன்(வயது 58). இவருடைய மனைவி விஜயலட்சுமி. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். சந்திரசேகரன், திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் உள்ள மாவட்ட குற்றப் பதிவேடுகள் கூடத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். விஜயலட்சுமி, திருவாரூர் நகர போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் சந்திரசேகரன் வழக்கம்போல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு பணிக்கு சென்றார்.

மாரடைப்பு

மதியம் சாப்பிட்டு விட்டு அவர் தனது பணிகளை கவனித்துக் கொண்டிருந்தபோது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயக்கம் போட்டு கீழே விழுந்தார். இதையடுத்து அங்கிருந்த சக ஊழியர்கள் அவரை உடனடியாக மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் மாரடைப்பால் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். பணியின்போது மாரடைப்பில் உயிரிழந்த சந்திரசேகரன், திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர், திருவாரூர் தாலுகா ஆகிய போலீஸ் நிலையங்களில் எழுத்தராக பணியாற்றி உள்ளார். கடந்த 4 ஆண்டுகளாக திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் உள்ள மாவட்ட குற்றப்பதிவேடுகள் கூடத்தில் பணிபுரிந்து வந்தார்.

போலீசார் சோகம்

திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக ஒரு ஆண்டு பணியில் இருந்த கோவை சரக டி.ஐ.ஜி. விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மாரடைப்பால் உயிரிழந்தது போலீசார் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story