எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் இன்று தொடங்குகிறது


எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் இன்று தொடங்குகிறது
x

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு மாநிலம் முழுவதும் இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது.

மதுரை

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு மாநிலம் முழுவதும் இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது.

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள்

மதுரை மாவட்டத்தில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் கார்த்திகா தலைமையில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, மதுரை கல்வி மாவட்டத்தில் 232 பள்ளிகளில் இருந்து 17467 மாணவ, மாணவிகள் தேர்வெழுத உள்ளனர்.

மேலூர் கல்வி மாவட்டத்தில் 254 பள்ளிகளில் இருந்து 21,478 மாணவ, மாணவிகள் தேர்வெழுதுகின்றனர். மாவட்டம் முழுவதும் 38,945 மாணவ, மாணவிகள் தேர்வெழுத உள்ளனர். இவர்களுக்காக 145 தேர்வு மையங்களும், தனித்தேர்வர்களுக்காக 4 மையங்களும் மதுரை மத்திய சிறையில் ஒரு தேர்வு மையமும் அமைக்கப்பட்டுள்ளது.

போலீஸ் பாதுகாப்பு

இது தவிர, தேர்வு மைய கண்காணிப்பாளர்கள், ஆசிரியர்கள், பறக்கும் படையினர் என தனியாக தேர்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. வினாத்தாள் காப்பு மையங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தேர்வுகள் காலை 10.15 மணிக்கு தொடங்கி மதியம் 1.15 மணிக்கு முடிகிறது. ஆனால், மாணவ, மாணவிகள் தேர்வு மையத்துக்குள் காலை 9.30 மணிக்குள் வருகை தர வேண்டும். இதையொட்டி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு அறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு தேர்வறையில் எப்படி பணியாற்ற வேண்டும் என்பது குறித்து அந்தந்த பள்ளிகளில் பயிற்சி அளிக்கப்பட்டது.


Next Story