எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் மவுண்ட் சீயோன் பள்ளி சாதனை


எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் மவுண்ட் சீயோன் பள்ளி சாதனை
x

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் மவுண்ட் சீயோன் பள்ளி சாதனை படைத்துள்ளனர்.

புதுக்கோட்டை

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில், மாநில அளவில் சிறப்பிடம் பெற்று மவுண்ட் சீயோன் பள்ளி மாணவி கீர்த்திகா சாதனை புரிந்துள்ளார். பள்ளி மாணவி கீர்த்திகா 496 மதிப்பெண்களும், பாலசுந்தரி 492 மதிப்பெண்களும், ஸ்வேதா 485 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர். இதில் ஆங்கிலம், கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களில் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். மேலும் 18 மாணவ-மாணவிகள் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர். சாதனை படைத்த மாணவர்களை பள்ளி நிர்வாக முதல்வர் கிருபா ஜெபராஜ் மற்றும் உயர்நிலைப்பள்ளி ஒருங்கிணைப்பாளர் ரஞ்சித் சாமுவேல் மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்தி பாராட்டினர்.


Next Story