எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 வகுப்புக்கு இணையான சான்றிதழ் பெற வாய்ப்பு-28-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்


எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 வகுப்புக்கு இணையான சான்றிதழ் பெற வாய்ப்பு-28-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்
x

தொழிற்பயிற்சி நிலைய சான்றிதழ் பெற்றவர்கள் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 வகுப்புக்கான சான்றிதழ் பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

விருதுநகர்

தொழிற்பயிற்சி நிலைய சான்றிதழ் பெற்றவர்கள் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 வகுப்புக்கான சான்றிதழ் பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

சான்றிதழ்

விருதுநகர் மாவட்டத்தில் 8-ம் வகுப்பு தேர்ச்சியுடன் தொழிற்பயிற்சி நிலையத்தில் என்.டி.சி., என்.ஏ.சி. சான்றிதழ் பெற்றவர்கள் எஸ்.எஸ்.எல்.சி. தமிழ் மற்றும் ஆங்கில மொழி பாடங்களில் தேர்ச்சி பெற்றால் எஸ்.எஸ்.எல்.சி.க்கு இணையான சான்றிதழும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சியுடன் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்று என்.டி.சி., என்.ஏ.சி. சான்றிதழ் பெற்றவர்கள் பிளஸ்-1 வகுப்பு மற்றும் பிளஸ்-2 வகுப்பு தமிழ் மற்றும் ஆங்கில மொழி பாடங்களில் தேர்ச்சி வழங்கப்படும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கலாம்

தொடர்ந்து அரசு தேர்வு இயக்ககத்தால் ஆகஸ்டு 2022-ல் நடத்தப்பட்ட மொழி தேர்வில் தனித்தேர்வகளாக கலந்து கொண்டு தேர்ச்சி பெற்ற தொழிற்பயிற்சி சான்றிதழ் பெற்றவர்கள் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 வகுப்புக்கு இணையான சான்றிதழ் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்ப படிவம் முழு விவரங்கள் அடங்கிய நிலையான வழிகாட்டுதல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. மேற்கண்ட சான்றிதழ் பெற விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் உரிய விண்ணப்ப படிவத்தினை அரசின் தொழிற்பயிற்சி நிலையம் விருதுநகரில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ வருகிற 28-ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு விருதுநகர் தொழிற்பயிற்சி நிலையத்தின் தொலைபேசி எண் 04562-252655 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

இந்த தகவலை கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.


Next Story